இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பூரண ஆதரவு: சீன வெளிவிவகார பிரதி அமைச்சர்

#SriLanka #China #economy
Mayoorikka
10 months ago
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பூரண ஆதரவு:  சீன வெளிவிவகார பிரதி அமைச்சர்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளுக்கு சீனா பூரண ஆதரவளிக்கும் என சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வீடோங் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

 சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சீனா ஆர்வம் காட்டுவதாக சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்தார்.

 கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சீன பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன பிரதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொள்வதில் சீனாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பிரதி அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஆராய சீனா ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

 சீன துணை வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டோங்கின் இலங்கை விஜயம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி ஒத்துழைப்பை அதிகரிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

images/content-image/1685517595.jpg