யாழின் குடிநீர் பிரச்சினைக்கு ஐவர் கொண்ட குழு நியமனம்

#SriLanka #Jaffna #Lanka4 #srilankan politics
Kanimoli
1 year ago
யாழின் குடிநீர் பிரச்சினைக்கு ஐவர் கொண்ட குழு நியமனம்

யாழ்ப்பாணத்திற்கு குடி தண்ணீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான சி.வி.கே. சிவஞானம் குற்றச்சாட்டினார் இன்று இடம்பெறுகின்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துரைக்கும் போது அவர். மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகிய இடம் பெற்று வருகின்றது. குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அந்த குடிநீர் வழங்குவதற்கான குழாய் புதைக்கும் திட்டமானது நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. ஆனால் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் ஊடாக தற்போது காற்றுக் கூட வருகிறதோ தெரியவில்லை ஆனால் இந்த குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்கினை காட்டுகிறார்கள் இதுதான் உண்மை. 

குறிப்பாக இந்த அரசியல்வாதிகள் யாரும் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தொடர்பில் கதைத்ததாக இல்லை அண்மையில் நான் புதிதாக கடமையேற்ற ஆளுநரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளேன். எனவே குடிநீரை கொண்டு வருவதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தீர்மானத்தை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருந்தோம். எனவே கிடப்பில் கிடக்கின்ற தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 அந்த கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர், பிரதமர் செயலாளர், நீர்பாசன பொறியியலாளர், களப்பணிப்பாளர் உட்பட ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது

 குறித்த குழு நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதோடு நாளை மறுதினம் முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!