மியன்மாரில் அவசரகால நிலை மேலும் நீட்டிப்பு!
#world_news
#Lanka4
#Emergancy
Thamilini
2 years ago
மியான்மரின் இராணுவ அரசாங்கம் அவசரகால நிலையை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி அவசரகால நிலை ஜனவரி 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சில் அவசரகால நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்ததாக இராணுவ ஆட்சிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறினார்
இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று நம்பப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆங் சான் சூகி தலைமையிலான சிவில் அரசாங்கத்தை கவிழ்த்து கடந்த 2021 இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.