பிறந்தநாள் வாழ்த்து அட்டையுடன் கிடைத்த மில்லியன் கணக்கான பணம்!
#SriLanka
#Australia
#Lanka4
Thamilini
2 years ago
அவுஸ்ரேலியாவில் பெண் ஒருவருக்கு கிடைத்த லாட்ரி டிக்கெட்டில் 2.58 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவுஸ்ரேலியாவில் பிறந்தநாள் கொண்டாடிய பெண் ஒருவருக்கு குறித்த லாட்ரி டிக்கெட்டை உறவுக்காரர் ஒருவர் வாழ்த்து அட்டையுடன் அனுப்பிவைத்துள்ளார்.
பின்னர் அந்த பெண் அதனை சோதனையிட்டபோது அதற்கு பெரும் பரிசுத் தொகை இருந்தது தெரியவந்தது. 2.58 மில்லியன் டாலர்கள் பரிசு தொகையை அவர் வென்றுள்ளார்.
குறித்த பெண் தனது உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியபோது, அவரும் இந்த சம்பவம் குறித்து ஆச்சரியமடைந்துள்ளார்.