பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம்புரண்டது - 15 பேர் பலி!

#Accident #world_news #Pakistan #Lanka4 #Train
Thamilini
2 years ago
பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம்புரண்டது - 15 பேர் பலி!

பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன. 

ராவல்பிண்டி நோக்கி பயணித்த குறித்த ரயிலானது கராச்சியில் இருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியது. 

விபத்து குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்பு பணியினர் வருகைதந்துள்ளனர். அத்துடன் முதலுதவி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

மேலும் விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. இந்நிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!