சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குகள் பிரவேசிப்பவர்களை தடுக்க துரித நடவடிக்கை வேண்டும்!
#world_news
Thamilini
2 years ago
சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்குள் நுழைய முற்படும் மக்களை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மக்களை ஐரோப்பாவிற்கு அனுப்புவதற்காக ஆட்கடத்தல்காரர்கள் அதிக பணத்தை வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடல்வழியான பயணங்கள் மூலம் அதிகம் ஆபத்து ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.