புயல் எதிரொலி : அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
புயல் காரணமாக அமெரிக்காவில் பெரும்பாலான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த புயலில் சிக்கி குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டென்னசி முதல் நியூயார்க் வரை சுமார் 10 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 1.1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் கடைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் புயலுடன். அழங்கட்டி மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.