ஜபோரிஜியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!
#War
#Lanka4
Thamilini
2 years ago
ஜபோரிஜியாவில் நேற்று (07.08) நூற்றுக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து டெலிகிராமில் எழுதியுள்ள உள்ளூர் இராணுவ அதிகாரி யூரி மலாஷ்கோ, நேற்று 105 ரஷ்ய குண்டுகள் இப்பகுதியில் தாக்கியதாகக் கூறினார். குண்டுகள் வீசப்பட்ட 87 பகுதிகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
அவற்றில் பெரும்பாலானவை பிராந்தியத்தின் கிழக்கு மற்றும் தெற்கு முனைகளில் உள்ளன எனத் தெரிவித்த அவர், எட்டு விமான எதிர்ப்பு தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறினார்.