14 பாம்புகளை பாக்கெட்டிற்குள் வைத்து கடத்த முற்பட்ட நபர் கைது!
நபர் ஒருவர் உயிருடன் இருந்த 14 பாம்புகளை தனது பாக்கெட்டில் வைத்து சீன எல்லை வழியாக கடத்த முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கிழக்கு சீனாவின் ஷென்சென் பகுதியில் சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லையில் உள்ள நுழைவாயிலில் அமைந்துள்ள ஃபுடியன் துறைமுகத்தில் வைத்து அவர் பாம்புகளுடன் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன எல்லையில் உள்ள ஹுவாங்காங் சுங்கத்தின் முகவர்கள், அந்த நபர் பதட்டமாக இருப்பதையும் அவர்களுடன் கண் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதையும் கவனித்ததாக கூறியுள்ளனர்.
குறித்த நபரின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திருந்த குறித்த பயணி அடிக்கடி தனது காலுறைகளை சோதனை செய்வதை வீடியோ காட்சி காட்டுக்கிறது.
இதனையடுத்து அவரை சோதனை செய்த அதிகாரிகள் காலுறையில் இருந்த பாம்புக்குட்டிகளை மீட்டுள்ளனர். குறித்த 14 பாம்புகளும் பிளாஸ்டிக் கொள்கலன்களுக்குள் வைக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.