ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனம்!

காட்டுத் தீ காரணமாக ஹவாய் தீவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த தீயில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மேலும் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட குழுவொன்றும் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த தீவில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. 

வேகமாக வீசும் காற்றினால் சேதங்கள் அதிகரித்துள்ளதாகவும், பெருமளவிலான கட்டிடங்கள் இடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!