குத்துச் சண்டைக்கு இத்தாலியை தெரிவு செய்துள்ள எலான் மஸ்க்!
#world_news
#Zuckerberg
#Lanka4
Thamilini
2 years ago
உலக கோடீஸ்வரரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு எதிரான குத்துச் சண்டை இத்தாலி நாட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மஸ்க், குத்துச் சண்டை இரு கோடிஸ்வரர்களின் சமூகவளைத்தளங்களில் லைவ்ஸ்ட்ரீம் செய்யப்படும் எனவும், இதற்கு இத்தாலியை தெரிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், கேமரா பிரேமில் உள்ள அனைத்தும் பண்டைய ரோமாக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இத்தாலி பிரதமர் மற்றும் கலாச்சார அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் அவர் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.