ஈராக்கில் நடந்த வான்தாக்குதலில் பயங்கரவாதிகள் ஐவர் மரணம்
#Death
#Attack
#Missile
#Iraq
Prasu
2 years ago
ஈராக் நாட்டின் வடக்கு மாகாணமான கிர்குக் நகரில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிக அளவில் பதுங்கி இருந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து ஈராக் ராணுவத்தினருக்கு துப்பு கிடைத்ததையொட்டி நகரில் தாக்குதல் நடத்த முடிவானது. அதன்படி ஈராக் ராணுவத்தின் போர் விமானங்கள் கிர்குக் நகரின் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.
வெடிகுண்டுகள் வீசி சரமாரி வான்தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் இறந்திருக்கலாம் என ஈராக் ராணுவம் தரப்பில் சொல்லப்படுகிறது.
மேலும் பலர் படுகாயம் அடைத்திருப்பதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.