பாகிஸ்தானில் பேருந்து விபத்து -18 பேர் பலி!
#Accident
#world_news
#Bus
#Pakistan
#Lanka4
Thamilini
2 years ago
பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் நேற்று (20.08) பேருந்து ஒன்றுவிபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் தீபிடித்தது.
இதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றரன்.