கிரேக்கத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட 18 சடலங்கள்!
#world_news
#Lanka4
#fire
Thamilini
2 years ago
கிரேக்கத்தில் காட்டுதீயினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியொன்றிலிருந்து 18 உடல்கள் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு நாட்களாக காட்டுதீ வேகமாக பரவிவரும் பகுதியிலேயே குறித்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
டாடியா காட்டுப்பகுதியில் இந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர்கள் குடியேற்றவாசிகளாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கிரேக்கத்தின் வடக்குகிழக்கில் உள்ள எவ்ரோஸ் பிராந்தியம் காட்டுதீயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அதிகரித்து வரும் வெப்பநிலை காட்டுத்தீ அபாயங்களை அதிகரித்துள்ளது.