அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவும் ஆபத்து - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
#Australia
#people
#fire
#Forest
Prasu
2 years ago
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2019 - 2020 கறுப்பு கோடைகால காட்டு தீயை விட இது பெரும் தாக்கமாக அமையும் என பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ அனர்த்தம் தொடர்பில் அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழமைக்கு மாறான வெப்பநிலை, மழை வீழ்ச்சி குறைவு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களாலேயே குறித்த காட்டுத்தீ அனர்த்தம் ஏற்படும்.
இந்நிலைமை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் விழிப்பாக இருக்கவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், குயின்ஸ்லாந்து, நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா, நோர்தேன் டெரிடட்டரி ஆகிய பிரதேசங்களே பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.