தென்னாப்பிரிக்காவில் இருதரப்பினரக்கு இடையில் நடத்த சண்டையில் 18 பேர் உயிரிழப்பு!
#world_news
#Lanka4
#SouthAfrica
Thamilini
2 years ago
தென்னாப்பிரிக்காவின் 'லிம்போபோ' மாநிலத்தில் காவல்துறைக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 கொள்ளையர்கள் உயிரிழந்தனர்.
நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் கொள்ளைச் சம்பவங்களுக்கும் இந்தக் கொள்ளைக் கும்பல்தான் காரணம் என்று அந்த நாட்டின் தேசிய பொலிஸ் கமிஷனர் ஃபேனி மசெமோலா தெரிவித்துள்ளார்.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை பொலிஸாரும், நாட்டின் புலனாய்வு அமைப்புகளும் பல நாட்களாக தேடி வந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சண்டையில் 16 ஆண்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.