IMF திட்டத்தில் இருந்து வரிச்சுமையை தவிற வேறு எதையும் பெறவில்லை - விஜித ஹேரத்!

மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் எதையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது நிச்சயமற்றது எனவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம் பல்வேறு வரிகளை விதித்ததுடன் மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகளை அதிகரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது எனக் கூறிய எவர், இலக்கு அரச வருமானம் அடையப்படவில்லை என்று கூறி, அதிக வரிகளை விதிக்கவும், மின் கட்டணங்களை மேலும் அதிகரிக்கவும், IMF தொடர்ந்து அரசாங்கத்தை வற்புறுத்துகிறது என்றும் கூறினார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வருமான வரிக் கோப்புகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.