கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்த WHO தலைவர்

#Corona Virus #government #WHO #Disease #Warning #officer #World #lanka4Media #lanka4.com
Prasu
10 months ago
கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்த WHO தலைவர்

2019 டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் தோன்றி பரவிய கொரோனா வைரஸ் நுண்கிருமியால், கோவிட்-19 எனும் சுவாச தொற்று நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதை பெருந்தொற்று என உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி சுகாதார அவசர நிலையை கொண்டு வந்தது.

2020ல் உலகின் அனைத்து நாடுகளிலும் வெகுவேகமாக பரவிய இந்த பெருந்தொற்று, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. உயிரிழந்தவர்களின் உடல்களை கூட உறவினர்கள் தூரத்தில் நின்று மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டு, அந்த உடல்களை மருத்துவமனை ஊழியர்களே அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், சமீப சில மாதங்களாக ஆங்காங்கே இந்தியா உட்பட உலக நாடுகளில், ஜேஎன்.1 (JN.1) எனும் கொரோனா வைரசின் புதிய திரிபு பரவ தொடங்கி உள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரேய்சஸ் (Tedros Adhanom Ghebreyesus), ஜெனிவாவில் இந்த புதிய திரிபு குறித்து கருத்து எச்சரித்துள்ளார்.

அவர் இது குறித்து தெரிவித்ததாவது: 2023 டிசம்பர் மாதம் மட்டுமே, ஜேஎன்.1 திரிபால் சுமார் 10 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எண்ணிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தை ஒப்பிட்டால் இது குறைவுதான் என்றாலும் இது ஏற்க கூடியது அல்ல.

 மேலும் சில இடங்களில் இது பரவி தகவல்கள் தெரிவிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கங்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!