பெர்லினில் உள்ள கார் உற்பத்தி ஆலையை மூட தீர்மானித்துள்ள டெஸ்லா நிறுவனம்
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக கப்பல் போக்குவரத்து விநியோக சங்கிலி சீர்குலைந்துள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் தனது ஒரே ஐரோப்பிய மின்சாரக் கார் தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளது.
செங்கடல் வழியேயான போக்குவரத்தை கப்பல் நிறுவனங்கள் தவிர்ப்பதால், நீண்ட விநியோக நேரங்கள் தேவைப்படுவதாக கூறும் டெஸ்லா நிறுவனம், இதனால் கார் விநியோகச் சங்கிலியில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
"செங்கடலில் ஆயுத மோதல்கள் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான போக்குவரத்து பாதைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று இது உலகின் பல்வேறு பகுதிகளுக்கான கப்பல் போக்குவரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பெர்லினில் உள்ள கார் உற்பத்தி ஆலையை ஜனவரி 29ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூட முடிவெடுத்துள்ளோம். மீண்டும் பெப்ரவரி 11ஆம் திகதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான செயல்பாடுகளே இடம்பெறும்.” எனவும் டெஸ்லா நிறுவனம் கூறுகிறது.