ஜேர்மனில் குடியுரிமை பெற ஆசைப்படுபவர்களுக்கான தகவல்!
குடியுரிமை பெறுவதற்கான விதிகளை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் சட்டமியற்றுபவர்கள் அங்கீகரித்துள்ளனர்.
இந்த விதிகளின்படி,புலம்பெயர்ந்தோரின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் திறமையான தொழிலாளர்களை ஈர்க்க உதவும் நோக்கத்துடன் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன் சடத்தின் படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது "சிறப்பு ஒருங்கிணைப்பு சாதனைகள்" ஏற்பட்டால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குடியுறிமை பெற தகுதியுடைவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
பழைய விதிகளின்படி, குடியுரிமைக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்ற ஒருவர் ஜேர்மனியில் 08 அல்லது 06 ஆண்டுகள் வசிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் ஜேர்மனில் பிறக்கும் குழந்தை ஒன்று பெற்றோர்கள் 05 வருடங்கள் அங்கு வசிக்கும் பட்சத்தில் தானாகவே குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பழைய விதிகளின்படி பெற்றோர்கள் நீண்டகாலம் அங்கு வசித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் மற்றும் சுவிட்சர்லாந்தைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இப்போது ஜேர்மன் குடியுரிமையைப் பெறும்போது தங்கள் முந்தைய குடியுரிமையைக் கைவிட வேண்டியிருந்த நிலையில் தற்போது, இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளும் கைவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.