உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடு அமெரிக்கா

#America #Country #Gold #Research #World #lanka4Media #lanka4.com
Prasu
10 months ago
உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடு அமெரிக்கா

தங்க கையிருப்பு ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக நிதி நிச்சயமற்ற காலங்களில் நம்பகமான மதிப்பின் சேமிப்பாக செயல்படுகிறது.

உலகளாவிய ரீதியில் அதிக தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே அதிக தங்க இருப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. 

அமெரிக்காவிடம் 8,1336.46 டன்கள் தங்கம் கையிருப்பில் உள்ளது. இந்த வரிசையில், 3 ஆயிரத்து 352.65 டன் தங்க இருப்புடன் ஜேர்மனி இரண்டாவது இடத்தையும் 2 ஆயிரத்து 451.84 தங்க இருப்புடன் இத்தாலி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

பிரான்சிடம் 2,436.88 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. 2,332.74 டன் தங்கம் இருப்புடன், ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடான சீனா, 2,191.53 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. 

சுவிட்சர்லாந்தில் 1,040.00 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. ஜப்பானில் 845.97 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. 800.78 டன் தங்கத்துடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் 612.45 டன் தங்கம் கையிருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தங்கம் வரலாற்று ரீதியாக ஒரு நாட்டின் நாணயத்தின் மதிப்பை ஆதரிக்கிறது. 

தங்கத் தரம் இனி பரவலாக நடைமுறையில் இல்லை என்றாலும், சில நாடுகள் இன்னும் நாணய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு முறையாக தங்க இருப்புக்களை உணர்கின்றன என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!