அரசியல் மோகத்தால் மகனை கொலை செய்த தந்தை
பாகிஸ்தானின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எந்த அரசியல் கட்சிக் கொடியைக் காட்டுவது என்பதில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தந்தை ஒருவர் தனது மகனைக் கொன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கத்தாரில் பணிபுரிந்து திரும்பிய மகன், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவர் புறநகரில் உள்ள குடும்ப வீட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் கொடியை ஏற்றியபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
“தந்தை தனது மகன் வீட்டில் பிடிஐ கொடியை ஏற்றுவதைத் தடுத்தார், ஆனால் மகன் அதைக் மறுத்துவிட்டார்” என்று மாவட்ட காவல்துறை அதிகாரி நசீர் ஃபரித் கூறினார். “தகராறு தீவிரமடைந்தது,
மேலும் கோபத்தில், தந்தை தனது 31 வயது மகன் மீது துப்பாக்கியால் சுட்டார்,” மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகன் உயிரிழந்துள்ளார்.தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.