கடந்த ஆண்டு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற 569 ரோஹிங்கியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

#Death #Refugee #Missing #illegal #Sea #lanka4Media #lanka4.com #Rohingya
Prasu
10 months ago
கடந்த ஆண்டு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற 569 ரோஹிங்கியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

ஆபத்தான படகு பயணம் காரணமாக கடந்த ஆண்டு சுமார் 569 ரோஹிங்கியர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவர் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறித்த எண்ணிக்கை அதிகரித்தமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

2023 இல் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஏறக்குறைய 4,500 ரோஹிங்கியா மக்கள் படகுகளை எடுத்துக்கொண்டு, பங்களாதேஷில் உள்ள நெரிசலான அகதிகள் முகாம்களில் இருந்து தப்பியோ அல்லது அவர்களது தாயகமான மியான்மரில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இவ்வாறு கடல் பயணம் மேற்கொண்ட எட்டு பேரில் ஒரு ரோஹிங்கிய அகதி உயிரிழந்ததாக அல்லது காணாமல் போனதாக UNHCR செய்தித் தொடர்பாளர் மேத்யூ சால்ட்மார்ஷ் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!