மூன்றாம் உலகப் போர் குறித்து கணித்த AI தொழில்நுட்பம்
ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், உலகின் பல நாடுகள் மூன்றாம் உலகப் போர் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கவலையடைந்துள்ளன.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) மூன்றாம் உலகப் போருக்கான தனது கணிப்புகளை தனது Chat GTPயில் வெளிப்படுத்தியுள்ளது. ஆறு பிராந்தியங்களில் இருந்து மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என அது கணித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானிய இராணுவ தளபதி பெட்ரிக் சேண்டர்ஸ் மற்றும் நேட்டோ பிரதானிகள் போருக்கு தயாராகுமாறு தமது நாடுகளின் மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பிரித்தானிய இராணுவ தளபதி மற்றும் நேட்டோ இராணுவ பிரதானிகள், ஆயுதம் ஏந்த தயாராக இருக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டனர்.
ஒவ்வொரு நாடும் தமது மக்களுக்கு சிவில் இராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும், போர் ஆரம்பித்தால், ரிசர்வ் படைகளின் பலம் போதுமானதாக இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவர்களின் இந்த அறிவிப்பால், முழு உலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் மூன்றாம் உலகப் போருக்கு தயாராகி வருவதாக பல நாடுகள் கருதுகின்றன.