பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் மனைவிக்கு மீண்டும் சிறைத்தண்டனை!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி அவர்களுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுகள் தொடர்பான வழக்கில் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு இன்று 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது சிறையில் உள்ள இம்ரானுக்கு தேசியத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, அரசு இரகசியங்களை கசியவிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் நேற்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இம்ரான் கான் 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து அவரது எதிரிகளால் வெளியேற்றப்பட்டார். மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் என்று இம்ரான் கான் தெரிவித்து வருகின்றார்.