சிலி காட்டுத்தீ - பலி எண்ணிக்கை 112ஆக உயர்வு
தென் அமெரிக்கா நாடான சிலியில் உள்ள கடற்கரை நகரமான வினாடெல்மர் மற்றும் வாலடரைகோ மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென வனப்பகுதிக்குள் வேகமாக பரவியது.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததால் ஏராளமானோர் சிக்கி தீயில் கருகி இறந்தனர். பலியானவர்கள் உடல்கள் ரோட்டில் கருகிய நிலையில் கிடந்தது.
பலர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தெடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.