பருக்களாலும், அதன் தடத்தினாலும் அவதிப்படுகுறீர்களா? இந்த டிப்ஸ் உங்களுக்கானது!
தற்போதைய இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கும் பிராதான பிரச்சினையில் ஒன்றுதான் இந்த பருக்கள் முகத்தில் வருவது.
இந்த பிரச்சினையை சந்திக்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பாரிய ஒரு சவலாக உருவெடுத்திருக்கிறது. அத்துடன் இந்த பருக்களை இல்லாமல் செய்வதற்கு பல விடயங்களை செய்வர்களும் உண்டு. குறிப்பாக வீட்டில் வைத்தியம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அதேநேரம் மிகப் பெரிய கிளினிக்குகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் இவை எல்லாவற்றையும் செய்வதை விட முதலில் நாம் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பருக்கள் வந்துவிட்டால் அது குறித்து அச்சப்படவோ, அல்லது பயப்படவோ தேவையில்லை. சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதனை இலகுவில் குணப்படுத்தி விடலம். உண்மையில் பருக்கள் வருகிறது என்பதை விட பருவினால் ஏற்படுகின்ற தடம்தான் எங்களை மன ரீதியில் சோர்வடைய செய்கிறது.
பருக்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது,
01. உண்மையில் பருக்கள் வருவதால் நாம் கவலைப்பட வேண்டுமா?
உண்மையில் பருக்கள் ஒரு கிருமி தொற்று போன்றதுதான். அதனால் நாம் கவலை கொள்ள தேவையில்லை. ஆனால் எங்களை பார்ப்பவர்கள், எங்களுடன் பழகுபவர்களின் நெகடிவான கமெண்டுகள் தான் நாம் கவலையடைவதற்கு காரணமாக இருக்கிறது. ஆகவே பருக்கள் வந்தாலும், வராவிட்டாலும், நீங்கள் அழகானவர்தான். ஆரோக்கியமாகதான் இருக்கிறீர்கள் என்பதை முதலில் உணர்ந்துக்கொள்ளுங்கள்.
02. உடற் பயிற்சி செய்யுங்கள்
அதிகளவு நீரை பருக வேண்டும். அதேபோல் எங்கள் உடலில் தீய கொழுப்புக்கள் கரைய வேண்டும். இதற்கு சிறந்த வழி தினமும் அரை மணித்தியாளங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
03. ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுங்கள். குறிப்பாக காபோவைதரேற்று கொண்ட உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல் பச்சை காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதேநேரம் முறையான, சரியான டயட்டை ஃபோலோ செய்யலாம்.
04. வைத்தியரை நாடுங்கள்
உங்களுக்கு அதிகளவில் பருக்கள் இருக்கும்போது சரியான வைத்தியரை நாடுங்கள். உங்கள் வைத்தியருடன் கலந்தாலோசித்து என்ன மாதிரியான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரிவு செய்யுங்கள். அவர்கள் சொல்வதன் படி சில காலங்களேனும் நடந்துக்கொள்ளுங்கள்.
05. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள்
இயற்கையாக கிடைக்கின்ற பொருட்களில் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஆனால் ஒரு சில பொருட்கள் உங்களுடைய தோலிற்கு ஒத்துவராததாகவும் இருக்கலாம். ஆகையால் எதை பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அதேபோல் அதை முகத்தில் பூசுவதற்கு முன் கைகளில் பூசி பக்கவிளைவுகள் ஏற்படுகிறதா என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்.