உக்ரைனின் பயிற்சி நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் : 60 பேர் உயிரிழப்பு!
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள பயிற்சி நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டு ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 60 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூத்த தளபதியின் வருகைக்காக டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள தளத்தில் படையினர் கூடியிருந்தவேளை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிர் பிழைத்த இராணுவ வீரர் ஒருவர்இ படையணியின் தளபதிகள் தங்களை திறந்தவெளியில் நிற்க வைத்ததாக கூறினார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்பில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அவர்கள் தாக்கப்பட்டதாகவும் ஏறக்குறைய 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உக்ரைனிய அதிகாரிகளிடமிருந்தும் தாக்குதல் பற்றி இதுவரை எந்த தகவலும் வரவில்லை.