இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 31,000 பாலஸ்தீனியர்கள் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் இதுவரை 31,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்திற்கு பலியாகும் அபாயத்திற்கு மத்தியில் காசா பகுதியில் உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த இஸ்ரேல் வலுவான சர்வதேச அழுத்தத்தில் உள்ளது.
5 மாத கால காஸா போர் முன்னெப்போதும் இல்லாத மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்று சர்வதேச விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் நேற்று (07) காஸா பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள போதிலும், போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக இஸ்ரேல் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று நெதன்யாகு கூறினார்.
வடக்கு மற்றும் மத்திய காசா பகுதியில் இருந்து மட்டுமல்ல, தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸிலிருந்தும் தப்பி ஓடிய சுமார் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் இப்போது எகிப்தின் எல்லை நகரமான ரஃபாவில் தங்கியுள்ளனர்.
அங்கு பெரிய அளவிலான தரைப்படை நடவடிக்கையை மேற்கொள்வது ஆபத்தானது என்று அமெரிக்கா கூட அறிவித்துள்ளது. ரஃபாவை ஹமாஸின் கடைசி கோட்டை என்று பிரதமர் நெதன்யாகு கூறுகிறார்.
ஆபரேஷன் ரஃபாவை நடத்த வேண்டாம் என்று யாரேனும் இஸ்ரேலிடம் கூறினால், அது போரில் இஸ்ரேலை தோற்கடிக்கச் சொல்வது போலாகும் என்று நெதன்யாகு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.