இத்தாலியில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறை - பிரதமர் மீது குற்றச்சாட்டு

#Prime Minister #Women #people #Crime #government #Italy
Prasu
8 months ago
இத்தாலியில் அதிகரிக்கும் பெண்கள் மீதான வன்முறை - பிரதமர் மீது குற்றச்சாட்டு

2023ல் இத்தாலி நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கணவர், ஆண் நண்பர், அல்லது தங்களை நன்கு அறிந்து பழகி வரும் அல்லது பழகி பிரிந்த ஆண் ஆகியோரால் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய கொலைகளுக்கு "ஃபெமிசைட்" (femicide) என பெயரிடப்பட்டுள்ளது. "இத்தாலிய என்சைக்ளோபீடியா" (Italian encyclopedia) 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியின் பிரதமர் "ஜியோர்ஜியா மெலனி" (Giorgia Meloni) ஒரு பெண் எனும் நிலையில், ஃபெமிசைட் குற்றங்களை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா என பெண்ணுரிமைவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இத்தகைய பல கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்களும் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகிறது.

 பாலின சமத்துவத்தில் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக, ஆணுக்கு சமமான ஊதியம் வழங்கப்படாததால், அந்நாட்டில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!