பாகிஸ்தானில் இரு மாணவர்களுக்கு கடூழிய தண்டனை விதித்த நீதிமன்றம்

#Arrest #Student #Pakistan #Whatsapp #HighCourt #execute
Prasu
8 months ago
பாகிஸ்தானில் இரு மாணவர்களுக்கு கடூழிய தண்டனை விதித்த நீதிமன்றம்

பாகிஸ்தானில், இறை நம்பிக்கைகளையும், இறை வழிபாட்டையும் நிந்தனை செய்வதும், பழித்து பேசுவதும், கடும் தண்டனைக்குரிய சட்டமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2022ல், இறை நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக "வாட்ஸ் அப்" செயலியில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டதாக குற்றம் சாட்டி ஒரு 22-வயது மாணவர் மற்றும் 17-வயது மாணவர் ஒருவர் மீது பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு முகமையின் (Federal Investigation Agency) சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்தது. இரு மாணவர்களும் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என கூறி வந்தனர்.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தற்போது இதனை விசாரித்த நீதிபதிகள் 22-வயது மாணவருக்கு மரண தண்டனை விதித்தும்,17-வயது மாணவருக்கு அவர் சிறார் என்பதால் ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தனர்.

இரண்டு மாணவர்களும் பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

 மரண தண்டனை விதிக்கப்பட்ட மாணவரின் தந்தை, லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!