டிக்டொக் மட்டுமல்ல பேஸ்புக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது : ட்ரம்ப் விமர்சனம்!
டிக்டொக்கின் தாய் நிறுவனத்தை தடை செய்யும் அல்லது அதன் மென்பொருளை அமெரிக்காவில் விற்பனை செய்யும் மசோதாவை முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இந்த திட்டம் ஃபேஸ்புக் உரிமையாளர் மெட்டாவுக்கு நியாயமற்ற நன்மைகளை அளிக்கிறது என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கருத்து தெரிவிக்கும்போது மேற்படி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதன்போது பேசிய அவர், டிக்டோக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பார்ப்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் பேஸ்புக் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.
2020ல், டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது, டிக்டோக்கை தடை செய்ய முயன்றார். டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதில் கையெழுத்திடுவேன் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியதாக கூறப்படுகிறது.