தென்கொரியாவில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!
#SriLanka
#SouthKorea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
தென் கொரியாவில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அங்கு மீன் பண்ணையில் பணியாற்றிய நிலையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீர் தொட்டி 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் உயரம் கொண்டது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த இரண்டு இலங்கையர்களும் 20 மற்றும் 30 வயதுடையவர்களாவர். மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேதபரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை காவல்துறையும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், நிலைமையை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
