சுவிற்சர்லாந்தில் அதிகரிக்கும் இதய நோய் மற்றும் புற்றுநோய் மரணங்கள்
#Death
#Switzerland
#Disease
#Heart Attack
Prasu
5 hours ago
கடந்த ஆண்டு சுவிற்சர்லாந்தில் பதிவான மொத்த இறப்புகளில் அதிகமானவை இதய நோயால் ஏற்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
மேலும், சுவிற்சர்லாந்தில் பெண்கள் மத்தியில் இறப்புக்கான மிகவும் பொதுவான காரணமாக இதய நோய் உள்ளது.
புதிய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் வசித்த கிட்டத்தட்ட 72,000 பேர் 2024ம் ஆண்டில் உயிரிழந்துள்ளனர், இதில் சுமார் 35,000 ஆண்கள் மற்றும் 37,000 பெண்கள் அடங்குவர்.
பெண்களைப் பொறுத்தவரை, இதய நோய் மரணத்திற்கு மிகவும் பொதுவான காரணமாகும் (கிட்டத்தட்ட 29%), அதைத் தொடர்ந்து புற்றுநோய் (22%) உள்ளது.
ஆண்களின் பெரும்பாலான இறப்புகள் புற்றுநோயாலும் (28%), அதைத் தொடர்ந்து இதய நோயாலும் (27%) ஏற்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )