உத்தர பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் மரணம்
#India
#Death
#Accident
#Bus
Prasu
1 hour ago
உத்தர பிரதேசத்தில் உள்ள பிகியாசின் பகுதியில், பஸ் ஒன்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நைனிடால் பகுதியில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பஸ்சில் சுமார் 18 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவலறிந்து பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
(வீடியோ இங்கே )