சர்வதேச கவனம் ஈர்த்த ஹோர்முஸ் நீரிணை ஒப்பந்தம்!
ஈரானுடனான பதற்றமான நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், முக்கியமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான கடல் வழிப்பாதையான Strait of Hormuz மீண்டும் திறக்கப்படுவதற்கான இந்த ஒப்பந்தம், எதிர்வரும் வார இறுதிக்குள் இறுதிப்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகின் எண்ணெய் ஏற்றுமதியில் கணிசமான பகுதி ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறுவதால், அங்கு ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சர்வதேச சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் புதிய ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அண்மைய மோதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்திருந்தன. எனினும், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இராஜதந்திர முயற்சிகள் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக அமலுக்கு வந்தால், ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து மீண்டும் வழமை நிலைக்குத் திரும்புவதுடன், உலகளாவிய எரிசக்தி சந்தைகளிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே