இலங்கைக்கு 04 பில்லியன் அமெரிக்க டொலர் மததிப்பிலான நிதியுதவியை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி!
மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தை நாடுகள் தாங்கிக்கொள்ள உதவும் வகையில், இலங்கை உட்பட 15 நாடுகளுக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நிதியுதவித் தொகுப்பை வழங்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அறிவித்துள்ளது.
இதில், அரசாங்கங்களால் கோரப்பட்ட சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரும், எரிசக்தி மற்றும் உணவு இறக்குமதிக்கான வர்த்தக நிதியாக வழங்கப்படும் 1 பில்லியன் அமெரிக்க டொலரும் அடங்கும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவ்வங்கியின் தலைவர் மசாடோ கண்டா, "மத்திய கிழக்கு மோதலால் நிதிநிலை, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம், சுற்றுலா, எரிபொருள் மற்றும் உர விநியோகம் ஆகியவற்றில் ஏற்படும் நெருக்கடிகள் உட்பட பல்வேறு தாக்கங்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு ஆதரவளிக்க, ADB வேகமாகவும் பெரிய அளவிலும் செயல்பட்டு வருகிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே