உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!! ரியாஸ் பாரூக் குற்றச்சாட்டு!

#SriLanka #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை திசை திருப்ப முயற்சி!!  ரியாஸ் பாரூக் குற்றச்சாட்டு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரின் மகன் பற்றி கதைத்து சுரேஷ் சாலே விடயத்தை திசைதிருப்ப எதிர்கட்சியினர் முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாரூக் குற்றம் சாட்டியுள்ளார். 

பாராளுமன்றத்தின் நேற்றை அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  முஸ்லிம் சமூகத்தின் தலைவர் என்று தன்னைத் தானே கூறிக்கொண்டிருப்பவர்   பிரபாகரனின் மகனை ஏன் காப்பாற்றவில்லை என்று  குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

அப்படியென்றால் அந்த காலத்தில் அரசாங்கம் யாருடையது? எமது 159 பேரும் அப்போது இருந்தார்களா? இப்போது அது தொடர்பில் கதைப்பவர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்?  இவர்கள் சுரேஸ் சலேவின் பிரச்சினையை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். 

 அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தவறானது என்ற கருத்தை கொண்டு செல்வதற்காகவே இந்த விடயத்தை உள்ளே புகுத்துவதற்காக  முயற்சிக்கின்றனர். 

 குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை குழப்புவதற்கே முயற்சிக்கின்றனர். ஆனால் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் இந்த அரசாங்கம் விசாரணைகளை நிறுத்தாது” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4