பாலியல் துஷ்பிரயோக விவகாரம் : இரத்த மாதிரியை வழங்க தேரருக்கு உத்தரவு!

#SriLanka #Court Order #Abuse #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
பாலியல் துஷ்பிரயோக விவகாரம் : இரத்த மாதிரியை வழங்க தேரருக்கு உத்தரவு!

15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கப்பட்ட விடயம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் மரபணு பரிசோதனைக்காக (டி.என்.ஏ) தனது இரத்த மாதிரியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.. 

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய ஹேமரத்ன தேரர், ஜூன் 16 ஆம் திகதி அன்று அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்குச் சென்று மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியை வழங்க வேண்டும். 

தேரரிடமிருந்து மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியை பெற்றுக்கொண்டதன் பின்னர், மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை (டி.என்.ஏ) அறிக்கையை அரச இரசாயனன்பகுப்பாய்வு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4