உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சூத்திரதாரிகளை விட வேடிக்கை பார்த்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!!

#SriLanka #Attack #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சூத்திரதாரிகளை விட வேடிக்கை பார்த்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான துல்லியமான புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் கூட  அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு  கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க விலியுறுத்தியுள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியில் உள்ள சூத்திரதாரியை கண்டுப்பிடிப்பதை விட புலனாய்வு தகவல்கள்  கிடைத்தும் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 

119 என்ற அவசர இலகத்திற்கு வரும் அழைப்புகளுக்கு கூட விரைவாக செசயல்படும் பொலிஸார் தாக்குதல் நடந்த சமயத்தில், பொலிஸ் நிலையத்தின் வாகனத்தை கூட அனுப்பவில்லை. அப்படியாயின்  உயர் மட்டத்திலிருந்து ஏதேனும் மறைமுக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதா என்பது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்ற உயர் அதிகாரிகள் மற்றும் அப்போதைய பொலிஸ் உயர் மட்டத்தினர், மாகாணப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இந்த அலட்சியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

 அவர்களில் பலர் இன்றும் அரச சேவையிலோ அல்லது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டோ சுதந்திரமாக வருவது கண்டிக்கத்தக்கது.  

 எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமாயின், இந்தத் தகவலைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4