சங்கீத்ஷனின் விடுதலைக்காக சுமந்தின் ஏன் ஜனாதிபதியுடன் பேசவில்லை ? எல்லாம் அரசியல் நாடகம் : அர்ச்சுனா!
சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனின் கைது நடவடிக்கையை வைத்து தமிழ் அரசியல் தலைவர்கள் அரசியல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நேற்று இடம்பெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாடல் பாடியதற்காக கைது செய்யப்பட்ட சொல்லிசை பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராக இருந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றி அவரை சாதாரண குற்றச்சாட்டில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தாம் அவரை விடுவிப்பதாக கூறியுள்ளார். மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து சுமந்திரனால் நூலகத்தை திறக்க முடியுமென்றால் ஏன் அவரால் ஜனாதிபதியுடன் கதைத்து சங்கீத்ஷனை விடுவிக்க முடியாது? எல்லாம் நாடகமே.
சுமந்திரனால் அதை செய்ய முடியாது. சங்கீதஷனை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதே இதற்கு காரணமாகும்.
வடக்கு மக்களை ஏமாற்றி இவர்கள் இவ்வாறான அரசியலில் ஈடுபடுகிறார்கள்.தமிழ் மக்கள் இனியாவது உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே