மடிக் கணினியில் உள்ள தகவல்களை மறைக்கும் சுரேஷ் சாலே!! நளிந்த ஜயதிஸ்ஸ விடுத்த கோரிக்கை!

#SriLanka #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Nalinda Jayatissa #Suresh Sallay
Thamilini
2 hours ago
மடிக் கணினியில் உள்ள தகவல்களை மறைக்கும் சுரேஷ் சாலே!! நளிந்த ஜயதிஸ்ஸ விடுத்த கோரிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய, முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தி விசாரணைகளுக்கு உதவுவதே அவர் செய்ய வேண்டிய சரியான காரியம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

 அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஒரு புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரி என்ற முறையில்  சுரேஷ் சாலே செய்யக்கூடிய சிறந்த காரியம், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனக்குத் தெரிந்தவற்றை வெளியிடுவதே ஆகும். பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். என வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன் உங்கள் மடிக்கணினி அல்லது கைப்பேசியில் உள்ள தகவல்களை வழங்குங்கள். அதை மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4