முன்னாள் அமைச்சர் ஜயகொடிக்கு எதிரான வழக்கு: குற்றச்சாட்டுகளை நீதிமன்றில் நிராகரிப்பு!

#SriLanka #Minister #Lanka4 #Case #Court #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
முன்னாள் அமைச்சர் ஜயகொடிக்கு எதிரான வழக்கு: குற்றச்சாட்டுகளை நீதிமன்றில் நிராகரிப்பு!

லங்கா உரம் நிறுவனத்தின் களஞ்சியசாலை வளாகத்தில் காபெட் (Carpet) இடும் ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக வழங்கியதன் மூலம், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் குற்றச்சாட்டுகளை முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி நிராகரித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (17) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிரான இரண்டு குற்றப்பத்திரிகைகளும் வாசித்துக் காட்டப்பட்டன. 

அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளி அல்ல என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் முறையான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு லங்கா உரம் நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக அவர் பணியாற்றிய காலத்தில், கொள்முதல் நடைமுறைகளை முறைகேடாகக் கையாண்டு குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டதன் மூலம், அரசாங்கத்திற்கு 8,859,708 ரூபா நஷ்டம் விளைவித்ததாகக் கூறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த ஊழல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4