நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துவருகிறது.
மாதா, பிதா, குரு தெய்வம் என்பதன்படி தெய்வமாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே பிஞ்சு மாணவர்களிடம் தமது கேவலமான இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயல்வது மிருக இனங்களில் கூட நடக்காத ஈனச் செயலாகும்.
சில வருடங்களுக்கு முன் கொட்டகலை பகுதியில் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒரு ஆசிரியர் தன்னிடம் கல்வி கற்கும் 14 வயது மதிக்கத்தக்க மாணவியை தொடர்ச்சியாக தமது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மிருகங்கள், பறவைகள் கூட பராயமடையாத தமது இளம் பருவத்தினருடன் பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தெய்வமாக மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர் அதுவும் திருமணம் முடித்து பல உறவுகளைக் கண்டவர்கள் தான இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
மேலும் கந்தப்பளை பிரதேசத்தில் ஓர் ஆசிரியர் தனது வகுப்பில் கல்வி கற்ற மாணவியை கர்ப்பமாக்கியது. சில வருடங்களுக்கு முன் தலவாக்கலையில் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி கற்ற மாணவியை துஷ்பிரயோகம் செய்தது.
அதே போல அப்புத்தளை பகுதியில் பேரப்பிள்ளைகளைக் கண்டுள்ள வயதிலுள்ள ஒரு அதிபர் பிஞ்சு மாணவர்களை தொடர்ச்சியாக தமது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியமை. இவ்வாறு பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
இவர்கள் இவ்வாறு அலட்சியமாக பதில் அளிப்பார்களா? இவ்வாறு ஈனச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்புக்கு ஆதரவளிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களிடம் அப்பிள்ளைகள் தாம் விரும்பிதான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று சிலர் சாமர்த்தியமாக பதிலளிக்கின்றார்கள். மாணவர்கள் தவறான வழியில் செல்லும் போது அவர்களை சரியாக வழிநடத்துவது ஒவ்வொரு ஆசிரியனதும் கடமையாகும்.
அரசியல் பலம் காரணமாக பெரும்பாலான ஆசிரியர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். இது சம்மந்தமாக சமூகம் இதுவரை எதிர்ப்பு நடமவடிக்கையோ அல்லது ஆர்ப்பாட்டங்களையோ மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களும் இவ்வாசிரியர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப வேண்டும். சமூகம் மழுங்கிய நிலையில் இருப்பது கூடாது.
இதே வேளை 2012ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கொழும்பு பாலிக்கா வித்தியாலய மாணவி ஒருவர் வர்த்தகதுறையில் முதலாம் இடம் பெற்றார்.. இவருக்கு கற்பித்த ஆசிரியர் ரூபா 40 இலட்சம் பெறுமதியான தன்னுடைய காரை தன் மாணவிக்கு அன்பளிப்பு செய்துள்ளார். இவ்வாறன மனிதநேய மிக்க ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
எனவே எம்மத்தியில் போற்றத்தக்க ஆசிரியர்களும் இருக்கிறார்கள். சில நாகரிகமற்ற ஆசிரியர்களின் செயற்பாடு காரணமாக மாணவர்களுக்கு உணர்வோடு கல்வி சேவையாற்றுபவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.