ஆத்ம ஸம்யம யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 54

#history #Article #Tamil People
ஆத்ம ஸம்யம யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 54

ஆறாவது அத்தியாயம் (ஆத்ம ஸம்யம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத ஷஷ்டோ அத்யாய:।

ஆத்ம ஸம்யம யோகம்

(மனத்தை வசபடுத்து)

ஸ்ரீபகவாநுவாச।
அநாஷ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய:।
ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய:॥ 6.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: செய்ய வேண்டிய செயல்களை யார் கர்மபலனை எதிர்பாராமல் செய்கிறானோ அவனே துறவி, அவனே யோகி, அக்னி சம்பந்தமான கிரியைகள் செய்யாதவனோ, செயல்களில் ஈடுபடாதவனோ இல்லை .

யம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ।
ந ஹ்யஸம்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந॥ 6.2 ॥

அர்ஜுனா ! எதை துறவு என்று சொல்கிறார்களோ அதை யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை விடாத யாரும் யோகி ஆவதில்லை.

ஆருருக்ஷோர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே।
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஷம: காரணமுச்யதே॥ 6.3 ॥

தியான யோகத்தை நாடுகின்ற முனிவனுக்கு செயல்கள் வழி என்று சொல்லபடுகிறது. அவனே தியான யோக நிலையை அடைந்து விட்டால் செயலின்மை வழியாக அமைகிறது.

யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே।
ஸர்வஸங்கல்பஸம்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே॥ 6.4 ॥

எப்போது புலன்கள் நாடுகின்ற பொருட்களில் ஒருவன் ஆசை வைப்பதில்லையோ , செயலில் பற்று வைப்பதில்லையோ, எல்லா நுண்நிலை ஆசைகளையும் விட்டுவிடுகின்ற அவன் தியானயோக நிலையை அடைந்து விட்டவன்.

உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்।
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥ 6.5 ॥

உன்னை உன்னாலேயே உயர்த்திக்கொள். உன்னை இழிவு படுத்தாதே. நீயே உனக்கு நண்பன். நீயே உனக்கு பகைவன்.

பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:।
அநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத்॥ 6.6 ॥

தன்னை வென்றவன் தனக்கு நண்பன் , தன்னை வெல்லாதவன் தனக்கு தானே பகைவன் போல் பகைமையில் இருக்கிறான்.

ஜிதாத்மந: ப்ரஷாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:।
ஷீதோஷ்ணஸுகது:கேஷு ததா மாநாபமாநயோ:॥ 6.7 ॥

தன்னை வென்றவனுக்கு , மனம் தெளிந்தவனுக்கு, குளிர் – சூடு, இன்பம் – துன்பம், மானம் – அவமானம் போன்ற இருமைகளில் இறைவுணர்வு நிலைத்திருக்கும்.

ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய:।
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஷ்மகாம்சந:॥ 6.8 ॥

ஞான, விஞ்ஞான அனுபவங்களின் வாயிலாக திருப்தி அடைந்தவன், மனச்சஞ்சலம் இல்லாதவன், புலன்களை வென்றவன், மண், கல், பொன் இவற்றை சமமாக பார்ப்பான்.— இத்தகையவன் யோகி என்று சொல்லபடுகின்றான்.

ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு।
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஷிஷ்யதே॥ 6.9 ॥

நல்ல உள்ளம் படைத்தவன், நண்பன், பகைவன், ஒதுங்கி இருப்பவன், நடுநிலை வகிப்பவன், வெறுப்புக்கு உரியவன், உறவினர், நல்லவன், பாவி என்று அனைவரிடமும் சமபுத்தியை உடையவன் மேலானவன் .

யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித:।
ஏகாகீ யதசித்தாத்மா நிராஷீரபரிக்ரஹ:॥ 6.10 ॥

தியான யோகத்தை நாடுபவன் யாரும் காணாமல் தனியாக இருந்துகொண்டு, புலன்களையும் உடம்பையும் வசபடுத்தி, ஆசைகளை விட்டு உடைமைகள் எதுவும் இல்லாதவனாக மனத்தை ஒன்று திரட்ட வேண்டும்.

ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந:।
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஷோத்தரம்॥ 6.11 ॥

தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:।
உபவிஷ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஷுத்தயே॥ 6.12 ॥

அசையாததும், அதிக உயரமாகவோ அதிகம் தாழ்ந்ததாகவோ அல்லாததும், துணி, தோல், தர்ப்பைப்புல் இவற்றை மேலே உடையதுமான இருக்கை ஒன்றை ஒரு சுத்தமான இடத்தில் தனக்காக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதில் அமர்ந்து மனத்தை ஒருமைபடுத்தி, பொறிபுலன்களின் செயல்களை அடக்கி, மனத்தூய்மைக்காக தியான யோகம் பழக வேண்டும்.

ஸமம் காயஷிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:।
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ்சாநவலோகயந்॥ 6.13 ॥

உடம்பு, தலை, கழுத்து இவற்றை நேராகவும் அசையாமலும் வைத்து கொண்டு, உறுதியாக அமர்ந்து, சற்று முற்றும் பார்க்காமல் தன்னுடைய மூக்கு நுனியை பார்க்க வேண்டும்.

ப்ரஷாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:।
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:॥ 6.14 ॥

என்னை குறிக்கோளாக கொண்டு அமைதியான உள்ளத்துடன், பயமின்றி, பிரம்மச்சரிய விரதத்துடன் மனத்தை வசபடுத்தி என்னிடம் வைத்து, ஆர்வத்துடன் அமர்ந்திருக்க வேண்டும்.

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ:।
ஷாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி॥ 6.15 ॥

இவ்வாறு மனத்தை ஒன்று திரட்டி, அதனை வசபடுத்திய யோகி, என்னிடம் உள்ளதும் முக்தியில் நிறைவுருவதுமான அமைதியை அடைகிறான்.

நாத்யஷ்நதஸ்து யோகோ அஸ்தி ந சைகாந்தமநஷ்நத:।
ந சாதிஸ்வப்நஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந॥ 6.16 ॥

அர்ஜுனா ! அதிகமாக உண்பவனுக்கு தியான யோகம் இல்லை, எதுவும் உன்னதவனுக்கும் இல்லை, அதிகமாக உறங்குபவனுக்கும் இல்லை, அதிகமாக விழித்திருப்பவனுக்கும் இல்லை.

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு।
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா॥ 6.17 ॥

உணவிலும் உடற்பயிற்சியிலும் அளவுடன் இருப்பவனுக்கு, செயல்களில் அளவுடன் ஈடுபடுபவனுக்கு, உறங்குவதிலும் விழித்திருப்பதிலும் அளவுடன் இருப்பவனுக்கு தியான யோகம் துன்பத்தை போக்குவது ஆகிறது.

யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே।
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா॥ 6.18 ॥

யாருடைய மனம் எல்லா ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, நன்றாக வசபடுத்தபட்டு ஆன்மாவிலேயே நிலைபெருகிறதோ அவன் தியான யோகி என்று சொல்லபடுகிறான்.

யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா।
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந:॥ 6.19 ॥

ஆன்ம தியானம் செய்கின்ற தியான யோகியின் அடங்கிய மனத்திற்கு காற்றில்லாத இடத்தில் இருக்கின்ற தீப சுடர் உவமையாக சொல்லபடுகிறது.

யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா।
யத்ர சைவாத்மநாத்மாநம் பஷ்யந்நாத்மநி துஷ்யதி॥ 6.20 ॥

தியானத்தால் வசபடுத்தபட்ட மனம் எப்போது ஓய்வு பெறுகிறதோ, எப்போது புத்தியால் ஆன்மாவை காண்கிறானோ, அப்போது அவன் ஆன்மாவில் மகிழ்கிறான்.

ஸுகமாத்யந்திகம் யத்தத் புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்।
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஷ்சலதி தத்த்வத:॥ 6.21 ॥

புத்தியால் அறிய தக்கதும், புலன்களுக்கு அப்பாற்பட்டதும், முடிவில்லாததுமான இன்பம் எதுவோ அதனை தியான யோகி அறிகிறான். அதில் நிலைபெற்று, அந்த ஆன்மாவிலிருந்து விலகாதிருக்கிறான்.

யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:।
யஸ்மிந்ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே॥ 6.22 ॥

தம் வித்யாத் து:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்।
ஸ நிஷ்சயேந யோக்தவ்யோ யோகோ அநிர்விண்ணசேதஸா॥ 6.23 ॥

எதை அடைந்த பிறகு அதைவிட அதிகமான வேறு லாபத்தை நினைப்பதில்லையோ, எதில் நிலைபெருவதால் மிக பெரிய துக்கத்தாலும் அலைகழிக்கபடுவதில்லையோ, துக்கத்தின் தொடர்பற்ற அதுவே தியான யோகம் என்று அறிந்துகொள். அந்த யோகத்தை உறுதியுடன் கலங்காத நெஞ்சத்துடனும் செய்ய வேண்டும்.

ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஷேஷத:।
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத:॥ 6.24 ॥

ஷநை: ஷநைருபரமேத் புத்த்யா த்ருதிக்ருஹீதயா।
ஆத்மஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிம்சிதபி சிந்தயேத்॥ 6.25 ॥

சங்கல்பதிலிருந்து தோன்றுகின்ற ஆசைகள் அனைத்தையும் முற்றிலும் விட்டு, புலன்களை மனத்தால் எல்லா பக்கங்களிலிருந்தும் நன்றாக கட்டுபடுத்தி , உறுதியுடன் கூடிய புத்தியால் மனத்தை ஆன்மாவில் நிலைபெற செய்து சிறுது சிறிதாக ஓய்வு பெற வேண்டும் . வேறு எதையும் நினைக்க கூடாது.

யதோ யதோ நிஷ்சரதி மநஷ்சம்சலமஸ்திரம்।
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஷம் நயேத்॥ 6.26 ॥

அலைபாய்வதும், ஒரு நிலையில் நிற்காததுமான மனத்தை, அது எந்தெந்த காரணங்களால் அலைகிறதோ, அவற்றிலிருந்து மீட்டு ஆன்மாவில் கொண்டு வர வேண்டும்.

ப்ரஷாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்।
உபைதி ஷாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்॥ 6.27 ॥

மிகவும் சாந்தமான மனத்தை உடைய, ரஜோ குணத்தின் வேகம் தணிந்த, தூய, இறை நிலையில் இருக்கின்ற இத்தகைய தியான யோகியை தான் மிக மேலான இன்பம் வந்தடைகிறது.

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ:।
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஷமத்யந்தம் ஸுகமஷ்நுதே॥ 6.28 ॥

இவ்வாறு எப்போதும் ஆன்மாவில் ஒருமைப்பட்டு புனிதம் பெற்ற யோகி, இறைவனின் தொடர்பால் வருகின்ற முடிவற்ற இன்பத்தை எளிதில் அடைகின்றான்.

ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி।
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஷந:॥ 6.29 ॥

யோகத்தில் நிலைபெற்ற எல்லாவற்றிலும் சமநோக்கு உடைய ஒருவன் தன்னை எல்லா உயிர்களிலும், தன்னிடம் எல்லா உயிர்களையும் காண்கின்றான்.

யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஷ்யதி।
தஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி ஸ ச மே ந ப்ரணஷ்யதி॥ 6.30 ॥

யார் என்னை எல்லாவற்றிலும் , எல்லாவற்றை என்னிலும் காண்கின்றானோ அவனுக்கு நான் மறைவதில்லை, அவனும் எனக்கு மறைவதில்லை.

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித:।
ஸர்வதா வர்தமாநோ அபி ஸ யோகீ மயி வர்ததே॥ 6.31 ॥

எல்லா உயிர்களிலும் இருக்கின்ற என்னை ஒரே இறைவனாக கண்டு , அதில் நிலைத்திருந்து யார் வழிபடுகிறானோ, அந்த யோகி எந்த நிலையில் இருந்தாலும் என்னிடமே இருக்கிறான்.

ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஷ்யதி யோ அர்ஜுன।
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:॥ 6.32 ॥

அர்ஜுனா ! அனைத்தையும் தன்னை போல் கருதி, சுகத்தையும் துக்கத்தையும் யார் சமமாக காண்கின்றானோ அந்த யோகி மேலானவனாக கருதபடுகிறான்.

அர்ஜுன உவாச।
யோ அயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸூதந।
ஏதஸ்யாஹம் ந பஷ்யாமி சம்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்॥ 6.33 ॥

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! என் மனம் சஞ்சலமாக உள்ளது. எனவே நீ கூறிய சமநோக்கு என்ற யோகம் என்னில் உறுதியாக நிலைக்கும் என்று தோணவில்லை.

சம்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்।
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்॥ 6.34 ॥

கிருஷ்ணா ! மனம் அலைபாயும் தன்மை உடையது, கலக்கம் தருவது, மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. மனத்தை வசபடுத்துவது காற்றை கட்டுபடுத்துவது போல் கடினம் என்று தோன்றுகிறது.

அஸம்ஷயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்।
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே॥ 6.35 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: பெரிய தோள்களை உடையவனே ! குந்தியின் மகனே ! மனம் அடக்க முடியாதது, அலைபாயகூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் அதை வசபடுத்திவிடலாம்.

அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:।
வஷ்யாத்மநா து யததா ஷக்யோ அவாப்துமுபாயத:॥ 6.36 ॥

மனத்தை வசபடுத்தமுடியாதவனால் தியான யோக நிலையை அடைய முடியாது. ( வைராக்கியம் கலந்த பயிற்சி என்கின்ற ) வழியில் மனத்தை வசபடுத்தி, முயற்சி செய்பவனால் அது முடியும் என்பது எனது கருத்து.

அயதி: ஷ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ:।
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி॥ 6.37 ॥

அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா ! மனசஞ்சலத்தின் காரணமாக ஒருவன் தனது பயிற்சிகளை சரிவர செய்யவில்லை. அதன் காரணமாக அவனால் நிறைநிலையை அடைய முடியவில்லை. ஆனால் அவனிடம் சிரத்தை உள்ளது. அத்தகையவனின் கதி என்ன ?

கச்சிந்நோபயவிப்ரஷ்டஷ்சிந்நாப்ரமிவ நஷ்யதி।
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி॥ 6.38 ॥

கிருஷ்ணா ! இறைநெறியில் தவறியவன் ஆதாரம் இல்லாமல் ( இம்மை, மறுமை ) இரண்டும் கிடைக்காமல் சிதறிய மேகம் போல் அழிந்து போகிறான் அல்லவா ?

ஏதந்மே ஸம்ஷயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஷேஷத:।
த்வதந்ய: ஸம்ஷயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே॥ 6.39 ॥

கிருஷ்ணா ! எனது இந்த சந்தேகத்திற்கு குறைவின்றி விளக்க தகுந்தவன் நீயே. இந்த சந்தேகத்தை விளக்குவதற்கு உன்னை தவிர வேறு யாரும் இல்லை.

பார்த நைவேஹ நாமுத்ர விநாஷஸ்தஸ்ய வித்யதே।
ந ஹி கல்யாணக்ருத்கஷ்சித் துர்கதிம் தாத கச்சதி॥ 6.40 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! ( இறைநெறியிலிருந்து வழுவ நேர்ந்தாலும் ) அவனுக்கு இங்கோ மறு உலகிலோ அழிவு என்பதே இல்லை. மகனே ! நன்மை செய்கின்ற யாரும் இழிநிலையை அடைவதில்லை.

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஷாஷ்வதீ: ஸமா:।
ஷுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ அபிஜாயதே॥ 6.41 ॥

இறைநெறியிலிருந்து வழுவியவன் புண்ணியம் செய்தவர்கள் இருக்கின்ற உலகங்களை அடைந்து அங்கே நீண்ட காலம் வாழ்ந்த பிறகு, செல்வம் நிறைந்த நல்லவர்களின் வீட்டில் பிறக்கிறான்.

அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்।
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஷம்॥ 6.42 ॥

அல்லது அறிஞர்களாகிய யோகிகளின் குலத்தில் பிறக்கின்றான். இது போன்ற பிறவி உலகில் மிகவும் அரியது.

தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்।
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந॥ 6.43 ॥

குரு வம்சத்தில் பிறந்தவனே ! முற்பிறவியில் கிடைத்த அறிவும் அந்த பிறவியில் அவனுடனேயே இருக்கிறது. எனவே நிறைநிலையை அடைவதற்கு அதிக முயற்சி செய்கிறான்.

பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஷோ அபி ஸ:।
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஷப்தப்ரஹ்மாதிவர்ததே॥ 6.44 ॥

அவன் முயற்சி செய்யாவிட்டாலும் முற்பிறவியின் பயிற்சியாலேயே இழக்கபடுகிறான். யோகத்தின் ஆரம்ப நிலை சாதகன் கூட வினைபயனை கடந்து விடுகிறான்.

ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஷுத்தகில்பிஷ:।
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்॥ 6.45 ॥

மிகவும் பாடுபட்டு சுயமுற்சியுடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற யோகி அதன் பிறகு குறைகள் நீங்க, பல பிறவிகளில் தொடர்ந்த முயற்சிகளின் நிறைவை பெற்று மேலான நிலையை அடைகிறான்.

தபஸ்விப்யோ அதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோ அபி மதோ அதிக:।
கர்மிப்யஷ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந॥ 6.46 ॥

தியான யோகி தபஷ்விகளை விட அறிஞர்களை விட செயலில் ஈடுபடுபவர்களை விட மேலானவான், எனவே அர்ஜுனா யோகி ஆவாய்.

யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா।
ஷ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:॥ 6.47 ॥

யார் செயல்திறன் கலந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுகிறானோ, அவன் எல்லா யோகிகளையும் விட மேலானவன் என்பது என் கருத்து.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஆத்மஸம்யமயோகோ நாம ஷஷ்டோ அத்யாய:॥ 6 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஆத்ம ஸம்யம யோகம்' எனப் பெயர் படைத்த ஆறாவது அத்தியாயம் நிறைவுற்றது.

விளக்கம்:

தியான யோகம் அதாவது மனத்தை அமைதியாக்குதல். அலைபாயும் தன்மையுடைய மனத்தை அடக்கி ஆளுதல். எவ்வாறு இதை அடைய முடியும். அனைத்து கடமைகளையும் / வேலைகளையும் செய்து கொண்டே ஆனால் எந்த வித ஆசையும் இல்லாமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கின்ற ஒருவனின் மனநிலை தானாகவே மன அமைதியை பெரும். சஞ்சலங்கள் இல்லாமல் இருக்கும்.

இந்த நிலையை அடைந்த ஒருவன் நிரந்தரமான அந்த ஆன்மாவை கண்டு மன அமைதியை பெறுவான். இவ்வாறு வெறுப்பு விருப்பு எந்தவித செயல்களிலும் நிகழ்வுகளிலும் இல்லாத ஒருவன் எப்போதும் இறையுணர்வில் இருப்பான். அதாவது சூடு – குளிர், நண்பன் – பகைவன், இன்பம் – துன்பம் இது போன்ற இருமைகளில் சமமாக இருப்பான்.

மேலும் தியான யோகம் பழக வேண்டும் என்றால் மக்கள் கூட்டம் இல்லாத இடத்திற்கு சென்று சற்று உயரமான இருப்பிடம் அமைத்து அதன் மீது நேராக அமர்ந்து அமைதியாக இருந்து மனத்தை எதிலும் அலைபாய விடாமல் புத்தியால் தனது உள்ளே இருக்கும் ஆன்மாவை காண முயல வேண்டும். இவ்வாறு கண்டுவிட்டால் அதை விட மேலான இன்பம் எதுவும் இல்லை என்பது புரிந்து விடும். இப்படி தியானம் செய்ய வேண்டும் என்றால் அளவாக உண்ணவும் உறங்கவும் வேண்டும்.

இப்படி தியான நிலையை அடைந்து விட்டால் எல்லா உயிர்களிலும் ஆன்ம வடிவில் இருப்பது பகவான் என்பது புரிந்துவிடும். எல்லா உயிர்களிடமும் அன்பாக நடந்து கொள்வான். அனைத்துமே இறைவனின் வடிவம் என்பது புரிந்துவிடும். மேலும் இந்த பிறவியில் ஒருவன் நல்ல காரியங்கள் பல செய்து தியானம் செய்து இறைநிலையை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்கும் போது இறந்துவிட்டால் அவன் மீண்டும் நல்லோர்கள் மத்தியில் பிறந்து முற்பிறவியில் பாதியில் விட்ட முயற்சியை மீண்டும் தொடர்ந்து செய்து அவன் இறைவனை அடைவான். ஒரு பிறவியிலிருந்து மருபிறவிக்கு செல்லும் போது முந்தய பிறவியின் குணமும் சேர்ந்தே வரும். பூவில் உள்ள மனம் காற்றோடு சேர்ந்து செல்வது போல் மனிதன் இறக்கும் போது அவனுடைய குணமும் ஆன்மாவோடு செல்லும். மறுபிறவியை அதனுடன் தொடருவான்.

தொடரும்....