எரிபொருட்களின் தரம் தொடர்பில் சிக்கலாயின் தொடர்பு கொள்ளலாம்.
#SriLanka
#Fuel
Mugunthan Mugunthan
3 years ago

எரிபொருளின் தரம் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, 011-5 234 234 அல்லது 011-5 455 130 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என அமைச்சர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
மேலும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கலவைகளை விற்பனை செய்யும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பந்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



