அடுத்த சில தினங்களில் லாஃப் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும்
Prabha Praneetha
2 years ago
சமையல் எரிவாயுவை பல மாதங்களாக சந்தைக்கு விநியோகிப்பதை நிறுத்தி இருந்த லாஃப் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்துள்ள எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடைய உள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரம் மெற்றி தொன் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.
இலங்கையில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவோரில் கணிசமான தொகையினர் லாஃப் எரிவாயுவையே பயன்படுத்தி வருகின்றனர்.