46 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றல்
Prabha Praneetha
2 years ago

46 கிலோ கஞ்சா நேற்று (14) மாலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்டைதீவு கடற்கரையில் இருந்தே இந்த 46 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட சமயம் கடற்படையினரைக் கண்டு கை விட்டுச் சென்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இதேநேரம் குறித்த கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டுள்ளது



