பரபரப்பாகும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் களம்! - வெற்றிபெற போவது யார்?

#Sri Lanka President #Dallas Alagaperuma #Sajith Premadasa #Ranil wickremesinghe
Nila
2 years ago
பரபரப்பாகும்  இலங்கை ஜனாதிபதி தேர்தல் களம்! - வெற்றிபெற போவது யார்?

அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் விஸ்வரூபம் எடுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதற்காக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கான நடவடிக்கைகளை அந்த வேட்பாளர்களை ஆதரிக்கும் கட்சிகள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க 04 குழுக்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 128 எம்.பி.க்களில் சுயேட்சை எம்.பி.க்கள் தவிர, சுமார் 112 பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட எம்.பி.க்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 எம்.பி.க்கள் மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த 12 சுயேட்சைக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுமார் 136 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறமுடியும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளிக்கும் 10 சுயேச்சைக் கட்சிகளின் குழுவிற்கும் இடையில் பொதுவான இணக்கப்பாடு ஏற்பட்டால் நிலைமை மாறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க இணங்கினால், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 56 எம்.பி.க்கள் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சுயேச்சை எம்.பி.க்கள் எம்.பி டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளித்தால் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என மற்றுமொரு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன்படி எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான மாற்றங்கள் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 56 பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமுக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவைப் பெற முடியுமானால், ஜனாதிபதித் தேர்தலில் அதிக அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.