கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மாணவி ஒருவர் குதித்து தற்கொலை

Kanimoli
2 years ago
கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மாணவி ஒருவர் குதித்து தற்கொலை

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலவாக்கலை பெயாவல் தோட்டத்தைச் சேர்ந்த முத்துரட்ணம் ஜிலோனி (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி லிந்துலை பிரதேசத்திலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் இரண்டாம் வருட மாணவியென பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!